கெட்டோனை ரக்ஷியும் சாவோனைக்


5.  'Rescue the perishing; care for the dying' (814)

1.         கெட்டோனை ரக்ஷியும்; சாவோனைக் காரும்
            பாவமும் சாபமும் நீங்கச் செய்யும்
            சோர்வோனைத் தாங்கிடும்; வீழ்ந்தோனைத் தூக்கும்
            சுப விசேஷத்தை அறிவியும்.

பல்லவி

            கெட்டோனை ரக்ஷியும், சாவோனைக்காரும்
            யேசு தயாபரர்; யேசு வல்லோர்.

2.         பாவ சண்டாளரைப் பொறுமையோடு
            திருத்தி ரக்ஷிக்கப் பார்க்கிறாரே
            மெய் மனஸ்தாபமாய் நம்பிக்கையோடு
            வந்தடைந்தால், அவர் மன்னிப்பாரே.

3.         தீக்குணம் நெஞ்சிலே, குன்றிப்போனாலும்,
            மோட்சத்தை நாடும் நல்லாசையுண்டாம்
            அன்பின் விசேஷத்தால், சத்தியத்தாலும்
            குன்றிய வாஞ்சையும் மேலிடுமாம்.

4.         கெட்டோனை ரக்ஷியும்; ஆத்திரத்தோடு;
            ஆவியின் வல்லமை அருளுவார்,
            ரக்ஷிப்பைக் கூறவும் உருக்கத்தோடு,
            தேவாசீர்வாதமும் தந்திடுவார்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு