18 May 2019

பரிசுத்தம்பெற வந்திட்டீர்களா


36.     'Have you been to Jesus for the cleansing power?'      (379)

1.         பரிசுத்தம்பெற வந்திட்டீர்களா
            ஒப்பில்லாத் திரு ஸ்நானத்தினால்?
            பாவதோஷம் நீங்க நம்பினீர்களா
            ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

பல்லவி

                        மாசில்லா - சுத்தமா?
                        திருப் புண்ணிய தீர்த்தத்தினால்,
                        குற்றம் நீங்கிவிடக் குணம் மாறிற்றா
                        ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்.

2.         பரலோக சிந்தை அணிந்தீர்களா
            வல்லமீட்பர் தயாளத்தினால்
            மறு ஜன்ம குணமடைந்தீர்களா
            ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

3.         மணவாளன் வரக் களிப்பீர்களா
            தூய நதியின் ஸ்நானத்தினால்
            மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களா
            ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

4.         மாசுகரை நீங்கும், நீசப்பாவியே!
            சுத்த ரத்தத்தின் சக்தியினால்,
            முத்திப்பேறுண்டாகும், குற்றவாளியே!
            ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...