இன்னமும் நாம் யேசு பாதத்தில்


என்றும் கர்த்தர் உன்னைக் காப்பாரே

364. ஆனந்த பைரவி                                               ஆதி தாளம்

பல்லவி

          இன்னமும் நாம் யேசு பாதத்தில்-சந்திக்கும் வரை
          என்றும் கர்த்தருன்னைக் காப்பாரே.

அனுபல்லவி

            தன்னுடைய காவலுன்மேல்-தப்பாமல் வைத்துத்தற்காத்துத்
            தன்னிருகரத்தால் உன்னைத்-தாங்கியே காத்துக்கொண்டு. - இன்ன

சரணங்கள்

1.         தன்னிரு சிறகுகளின் கீழ்-உன்னை மறைத்துத்
            தாங்கித் தயவோடு காப்பாரே!
            இன்னமும் திருமன்னாவை-என்றும் உனக்களித்தே
            இன்பமோடே உன்னைத் தாங்கி-எல்லாத் தீங்குக்குந் தற்காத்து. - இன்ன

2.         ஜீவியத்தின் பாரம் உன்னையே-வதைத்திடாமல்
            சீருடனே கர்த்தர் காப்பாரே!
            பாவ சோதனைகள் உன்மேல்-படர்ந்து பிடித்திடாமல்
            பாலித்தணைத்தே உன்னையே-பட்சமோடே பாதுகாத்து. - இன்ன

3.         ஆண்டவரின் அன்பின் கொடிதான்-உன்மேல் பறந்து
            ஆட, மகிழ்ந் தானந்தங்கொள்வாய்!
            நீண்டிடும் ஆயுளளித்து நிதமும் சுகத்தைத் தந்து
            நீண்ட காலமாக உன்னை-நேசித்துப் பரிபாலித்து. - இன்ன

- ச.ஜெ. சிங்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு