18 May 2019

சீரில்லாத பாபிஷ்டரே


35.     'Blessed be the Fountain of Blood'            (113)

1.         சீரில்லாத பாபிஷ்டரே!
            யேசுநாதர் மரித்தால்
            பாவதோஷம் தீர்ந்திடுமே
            ஏகபலியின் ரத்தத்தினால்
            நெறிதப்பிப் போவதினால்
            நிருமூட நீசரானோம்,
            மாசில்லாத ரத்தத்தினால்
            வெளேரென்று தூய்தாகுவோம்.

பல்லவி

                        வெண்மையாகுவோம்
                        வெண்மையாகுவோம்
                        மாசில்லாத ரத்தத்தினால்
                        வெளெரென்று தூய்தாகுவோம்.

2.         மோக்ஷலோக நாயகரே
            தாழ்மையோடு மாந்தனானார்.
            ஒப்பில்லாத மா நேசரே
            முட்கிரீடம் சூட்டப்பட்டார்!
            ரட்சை செய்தனராதலால்
            நன்றி நிறைத்தேயிருப்போம்.
            மாசில்லாத ரத்தத்தினால்
            வெளேரென்று தூய்தாகுவோம்.

3.         குணசிந்தை தீயதெல்லாம்
            பக்தி சுத்த சூனியமே
            தீவினை ரத்தாம்பரமாம்;
            சுத்திசெய்வார் ஈண்டில்லையே
            அருள்வாக்கை நம்புவதால்
            யேசுவண்டை சேர்ந்திடுவோம்.
            மாசில்லாத ரத்தத்தினால்
            வெளேரென்று தூய்தாகுவோம்.

2 comments:

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...