இந்த மங்களம் செழிக்கவே கிருபை


மங்களம் செழிக்கவே கிருபை செய்யும்

349. (313) துஜாவந்தி                                              ஆதிதாளம்

பல்லவி

            இந்த மங்களம் செழிக்கவே-கிருபை செயும்,
            எங்கள் திரித்துவ தேவனே!

அனுபல்லவி

            சுந்தரக் கானாவின் மணப் பந்தலில் சென் றம்பணத்தைக்[1]
            கந்தரசமாகச் செய்த விந்தைபோல், இங்கேயும் வந்து. - இந்த

சரணங்கள்

1.         ஆதி தொடுத் தன்பை எடுத்தாய்;-மானிடா் தமை
            ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்;
            நீதி வரம் நாலுங் கொடுத்தாய்;-பெற்றுப் பெறுகி
            நிற்க உலகத்தில் விடுத்தாய்;
            மாதவா் பணியும் வேத போதனே, அந்தப்படி உன்
            ஆதரவைக்கொண்டு சுதன் நீதியை நம்பிப் புரிந்த - இந்த

2.         தக்க ஆபிராமும் விண்டனன்;-அதனை மன
            துக்குள் எலியேசா் கொண்டனன்;
            முக்கிய ஆரன் நிலத்தண்டினன்;-நினைத்தபடி
            சக்கிமதாகக்[2] கண்டனன்
            பக்குவம் உரைத்திடாரே பக்காளும் ஈசாக்குவுக்குத்
            தக்க மண வாளியாகத் தந்து தயை செய்தாற்போல. - இந்த

3.         சத்திய வேதத்தின் வாசனே,-அருளு பரி
            சுத்த சுவிசேட நேசனே,
            பக்தர்கள் பவ வி மோசனே,-பழுதணுவும்
            அற்ற கிறிஸ் தேசு ராசனே,
            வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்ப்
            புத்திர சம்பத்துண்டாக்கி நித்ய சுப சோபனமாய். - இந்த

- வே. சாஸ்திரியார்




[1] நீர்
[2] சினேகமாக

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு