05 October 2018

கிறிஸ்தோரே எல்லாரும்


O come all ye faithful
Adeste fideles                       Irregular.

61

1.         கிறிஸ்தோரே எல்லாரும்
            களிகூர்ந்து பாடி
            ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
            தூதரின் ராஜா
            மீட்பராய்ப் பிறந்தார்

                        நமஸ்கரிப்போமாக
                        நமஸ்கரிப்போமாக
                        நமஸ்கரிப்போமாக
                                    கர்த்தாவை

2.         மகத்துவ ராஜா,
            சேனையின் கர்த்தாவே,
            அநாதி பிறந்த மா ஆண்டவா;
            முன்னணை தானோ
            உமக்கேற்கும் தொட்டில்

3.         விண் மண்ணிலும் கர்த்தர்
            கனம் பெற்றோர் என்று
            தூதாக்களே பாக்கியவான்களே
            ஏகமாய்ப் பாடி
            போற்றி துதியுங்கள்

4.         அநாதி பிதாவின்
            வார்த்தையான கிறிஸ்தே!
            நீர் மாமிசமாகி இந்நாளிலே
            ஜென்மித்தீர் என்று
            உம்மை ஸ்தோத்திரிப்போம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...