தூய பந்தி சேர்ந்த கைகள்
Strengthen for service Lord
Cross of Jesus
194 8, 7, 8, 7
1. தூய பந்தி
சேர்ந்த கைகள்
சேவை செய்யக் காத்திடும்;
தூய தொனி கேட்ட செவி
தீக்குரல் கேளாமலும்.
2. "தூயர் தூயர்" என்ற நாவு
வஞ்சனை பேசாமலும்,
தூய அன்பைக் கண்ட கண்கள்
என்றும் நம்பி நோக்கவும்.
3. தூய ஸ்தலம் சென்ற கால்கள்
ஒளியில் நடக்கவும்;
தூய ஆவி பெற்ற எம்மில்
நவ ஜீவன் பொங்கவும்.
Comments
Post a Comment