நான் தூதனாக வேண்டும்
Home Sweet Home. Ellacombe
242 7,
6, 7, 6 D.
1. நான் தூதனாக
வேண்டும்
விண்
தூதரோடேயும்;
பொற் கிரீடம் தலை மேலும்
நல்
வீணை கையிலும்
நான் வைத்துப் பேரானந்தம்
அடைந்து
வாழுவேன்;
என் மீட்பரின் சமுகம்
நான்
கண்டு களிப்பேன்.
2. அப்போது சோர்வதில்லை,
கண்ணீரும்
சொரியேன்;
நோய், துக்கம், பாவம், தொல்லை
பயமும்
அறியேன்;
மாசற்ற சுத்தத்தோடும்
விண்
வீட்டில் தங்குவேன்;
துதிக்கும் தூதரோடும்
நான்
என்றும் பாடுவேன்.
3. பிரகாசமுள்ள தூதர்
நான்
சாகும் நேரத்தில்
என்னைச் சுமந்து போவார்
என்
இயேசுவண்டையில்;
நான் பாவியாயிருந்தும்
என்
மீட்பர் மன்னித்தார்;
எண்ணில்லாச் சிறியோரும்
என்னோடு
வாழுவார்.
4. மேலான தூதரோடும்
நான்
தூதன் ஆகுவேன்,
பொற் கிரீடம் தலைமேலும்
தரித்து
வாழுவேன்;
என் மீட்பர்முன் ஆனந்தம்
நான்
பெற்று வாழ்வதே
வாக்குக் கெட்டாத இன்பம்,
அநந்த
பாக்கியமே.
Comments
Post a Comment