தூயர் ராஜா எண்ணிறந்த


King of saints to whom the number
Everton

157                                                                     8, 7, 8, 7 D

1.         தூயர் ராஜா, எண்ணிறந்த
                        வான்மீன் சேனை அறிவீர்;
            மாந்தர் அறியா அநேகர்
                        உம்மைப் போற்றப் பெறுவீர்.
            எண்ணரிய பக்தர் கூட்டம்,
                        லோக இருள் மூடினும்
            விண்ணின் ராஜ சமூகத்தில்
                        சுடர் போல விளங்கும்.

2.         அந்தக் கூட்டத்தில் சிறந்த
                        ஓர் அப்போஸ்தலனுக்காய்
            நாங்கள் உம்மைத் துதி செய்வோம்
                        வருஷா வருஷமாய்;
            கர்த்தர்க்காக அவன் பட்ட
                        நற் பிரயாசம் கண்டதார்?
            பக்தரின் மறைந்த வாழ்க்கை
                        கர்த்தர் தாமே அறிவார்.

3.         தாசரது ஜெபம், சாந்தம்,
                        பாடு, கஸ்தி யாவுமே
            தெய்வ மைந்தன் புஸ்தகத்தில்
                        தீட்டப்பட்டிருக்குமே;
            இவை உந்தன் பொக்கிஷங்கள்;
                        நாதா, அந்த நாளிலும்
            உம் சம்பத்தை எண்ணும்போது
                        எண்ணும் அடியாரையும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு