கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்


A safe stronghold our God is still
Ein' Feste Burg

206                                                     8, 7, 8, 7, 6, 6, 6, 6, 7

1.         கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்
                        அரண் பலமுமாமே;
            உண்டாம் இக்கட்டனைத்தையும்
                        போக்குவார் அவர்தாமே.
                        பொல்லாங்கனின் சினம்
                        இப்போது மா விஷம்,
                        துஷ்டமும் சூதையும்
                        அணிந்து உறுமும்-
            நிகர் புவியில் இல்லை.

2.         எதற்கு நாங்கள் வல்லவர்?
                        இந்நீசர் சக்தியற்றோர்;
            எங்களுக்காய் வேறொருவர்
                        போர் செய்வதற்கேற்பட்டோர்.
                        ஆர்? இயேசு கிறிஸ்துதான்;
                        ஆ இந்தப் பலவான்
                        ஆம் எங்கள் ரட்சகர்;
                        சேனாபதி அவர்
            ஜெயிப்பார் அவர்தாமே.

3.         விழுங்க வரும் பேய்களால்
                        புவி நிரம்பினாலும்
            பயப்படோம்; கர்த்தாவினால்
                        எதிர்த்து நிற்கக்கூடும்
                        இருளின் பிரபு
                        சீறினாலும், அது
                        நசுக்கப்பட்ட பேய்,
                        தள்ளுண்ணத் தீர்ந்ததே;
            ஓர் சொல்லினால் ஒழியும்.

4.         பகைஞர் தெய்வ வார்த்தையை
                        பகைத்தும், அது நிற்கும்;
            கர்த்தர் சகாயர், அவர் கை
                        வரம் தந்தாதரிக்கும்;
                        மாற்றார்கள் யாவையும்
                        ஜீவனையேதானும்
                        வாங்கினால், கேடாமோ;
                        இராஜ்ஜியமல்லோ
                        எங்களுக்கே யிருக்கும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு