05 October 2018

கர்த்தாவே பரஞ்சோதியால்


O Thou Who makest souls to shine
St. Lawrence

200                                                                                 L.M.

1.         கர்த்தாவே, பரஞ்சோதியால்
            ஆன்மாவைப் பிரகாசிப்பிப்பீர்;
            சீர் அருள் என்னும் பனியால்
            உம் அன்பாய்வோரை உய்விப்பீர்.

2.         உம் மந்தை சுத்தமாகவும்,
            விளக்கெல்லாம் இலங்கவும்
            போதகர் சபையாருக்கும்
            வரப்பிரசாதம் அருளும்.

3.         விண் ஆள் தாம் முதல் ஆகியே
            மற்றோரை ஆங்குயர்த்தவும்,
            விஸ்வாசம், நம்பிக்கை, அன்பே
            பிரசங்கிப்போர்க்கு ஈந்திடும்.

4.         எவ்வேழையான பேர்களும்
            மேலான ராஜியம் சேரவே,
            கேட்போர்க்குக் கற்க விருப்பம்,
            சற்குணம், சாந்தம் நல்குமே.

5.         நிர்ப்பந்த ஆயுள் முழுவதும்
            ஒன்றாய் விழித்திருக்கவே
            உம் மேய்ப்பர், மந்தை இரண்டையும்
            ஆசீர்வதித்துக் காருமே.

6.         இவ்வாறு அருள் செய்திடில்
            உம்மில் பிழைத்தும்மில் சாவோம்;
            இம்மையில் நாங்கள் வாழ்க்கையில்
            சாவாமையை முன் ருசிப்போம்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...