வியாதியஸ்தர் மாலையில்


At even ere the sun was set

Angelus

41                                      L.M.

1.          வியாதியஸ்தர் மாலையில்
            அவஸ்தையோடு வந்தனர்;
            தயாபரா, உம்மண்டையில்
            சர்வாங்க சுகம் பெற்றனர்.

2.                    பற்பல துன்பம் உள்ளோராய்
                        இப்போதும் பாதம் அண்டினோம்
                        பிரசன்னமாகித் தயவாய்
                        கண்ணோக்குவீரென்றறிவோம்

3.         விசாரம் சஞ்சலத்தினால்
            அநேகர் கிலேசப்பட்டனர்;
            மெய் பக்தி அன்பின் குறைவால்
            அநேகர் சோர்வடைந்தனர்.

4.                    பிரபஞ்சம் வீண் என்றறிந்தும்
                        பற்றாசை பலர் கொண்டாரே;
                        உற்றாரால் பலர் நொந்தாலும்,
                        மெய் நேசர் உம்மைத் தேடாரே.

5.         மாசற்ற தூய தன்மையை
            பூரணமாய்ப் பெறாமையால்,
            எல்லோரும் சால துக்கத்தை
            அடைந்தோம் பாவப் பாசத்தால்.

6.                    ஆ, கிறிஸ்துவே, மன்னுருவாய்
                         மா துன்பம் நீரும் அடைந்தீர்;
                        எப்பாடும் பாவமும் அன்பாய்
                        ஆராய்ந்து பார்த்து அறிவீர்.

7.         உம் வார்த்தை இன்றும் பலிக்கும்;
            நீர் தொட்டால் சொஸ்தம் ஆவோமே;
            ஆரோக்கியம் எல்லாருக்கும்
            இம்மாலை தாரும், இயேசுவே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு