ஒப்பற்ற நன்மையே


201. Cliffort, Franconia.                     S.M.

"Du unvergleichlichs Gut"


1.         ஒப்பற்ற நன்மையே
                        நான் உம்மை நேசிப்பேன்;
            விடாத வாஞ்சையுடனெ
                        நான் உம்மைத் தேடுவேன்.

2.         உமக்குத் தூரமாய்
                        நான் நிற்கும்போதெல்லாம்
            என் நெஞ்சத்தில் அகோரமாய்
                        விசாரங்கள் உண்டாம்.

3.         மாசற்ற நேசரே,
                        நீர் என்னை நோக்குமேன்;
            நித்திய அன்பின் ஜ்வாலையே
                        அனல் உண்டாக்குமேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு