20 October 2018

பெலவீனரின் பெலனும்


162. Realms of Glory, Bithynia 

- Alleluia dulce carmen  8, 7, 8, 7, 4, 7.

"Jeus, Kraft der bloden Herzen"

1.         பெலவீனரின் பெலனும்
                        துக்க பாரம் சுமந்த
            பாவ மாந்தர் நம்பிச் சாரும்
                        கன்மலையுமாகிய
                                    யேசு நாதா
                        என்னைப் பெலப்படுத்தும்.

2.         என் இதயம் ஜன்ம பாவம்
                        ஊறும் ஊற்றேயானது;
            என்னுடைய முழு ஸ்பாவம்
                        தீமையால் நிறைந்தது;
                                    பாவத்தோடு,
                        ஐயோ, நான் பிறந்தேனே!

3.         உம்முடைய ரத்தத்தாலே
                        குற்றம் நீக்கி ரட்சியும்;
            என்னை உம்தன் ஆவியாலே
                        சுத்தமாக்கி அருளும்;
                                    ஆ கர்த்தாவே!
                        ஆற்றித் தேற்றி ரட்சியும்.

4.         என்னுடைய நெஞ்சில் வந்து
                        தங்கும், என் சகாயரே;
            துக்கத்தை அதால் மறந்து,
                        வெற்றிக்கொண்டு வாழ்வேனே;
                                    பூரிப்போடு
                        உம்மைப் பாடிப்போற்றுவேன்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...