கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்


Christ is risen! Christ is risen!
Resurrexit

127                                       8, 7, 8, 7, 7, 5, 7, 5 with refrain

1.         கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்
            சாவின் கூரை முறித்தார்
            கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்!
                        அல்லேலூயா பாடுங்கள்!
                        நம்மை மீட்கச் சகித்தார்
                                    தெய்வ சித்த்தால்
                        சிலுவையில் மரித்தார்,
                                    அவர் ஸ்வாமியாம்.
            கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்!
                        சாவின் கூரை முறித்தார்;
            கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்!
                        அல்லேலூயா பாடுங்கள்!

2.         நாதன் சாவை ஜெயங்கொண்டார்
                        விண்ணோர் மண்ணோர் மகிழ்ந்தார்;
            நேசக் கர்த்தர் எழுந்ததோ
                        மா அதிசயமன்றோ?
            தந்தை வலப் பக்கத்தில்
                        என்றும் ஆளுவார்;
            மீண்டும் நடுத்தீர்ப்பினில்
                        நம்மை அழைப்பார்.

3.         வான தூதர் சேனை வந்து,
                        விண் பதியை வாழ்த்தவே,
            வார்த்தை அவதாரர்க்கே விண்
                        வாஞ்சித்தக மகிழ்ந்தே;
            வான ஜோதி இலங்க
                        பூமி மகிழ,
            கிறிஸ்துவே சர்வாதிபர்
                        என்குதே சிஷ்டி.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு