குடிக்க யாவரும்


Day Gnadenbruns fousst noch
Bavarian 138

280                                                     6, 7, 6, 7, 6, 6, 6, 6

1.                 குடிக்க யாவரும்
            அழைப்பு பெற்றதான
                        தெய்வீகத் தயவின்
            ஊற்றின்னம் ஓட்டமான
                        இப்போதென் ஆவியே,
                        நீ இயேசுவண்டை போ;
                        வேறு யாராகிலும்
                        ரட்சிக்கக் கூடுமோ.

2.                     சீர் கெட்ட உன்னை நீ
            ரட்சிப்பது வீணாமே,
                        நீ பற்ற வேண்டிய
            சகாயர் கிறிஸ்து தாமே;
                        பிதாவை இவரே
                        ஒப்புரவாக்கினார்,
                        இவர் நிமித்தமே
                        பிதா இரங்கினார்.

3.                     உன் பாவக் குற்றங்கள்
            உன்னால் நீங்காத கேடு;
                        மெய் விசுவாசத்தால்
            நீ இயேசு வண்டை சேரு;
                        உன் சுய புத்தியை
                        நீ பின்பற்றாதே போ,
                        வழியைக் காட்டுபவர்
                        தெய்வாவி அல்லவோ.

4.                     அன்புள்ள கர்த்தரே,
            அநேகப் பாவத்தாலே
                        திகைத்திருக்கிற
            நான், வேட்டைக்காரராலே
                        துரத்தப்பட்டதாம்
                        மான்போல் தவிக்கிறேன்;
                        இரக்கத்தின் ஊற்றே,
                        என் தாகந்தருமேன்.

5.                     மனத் தரித்திர்ர்
            விண்ணப்பத்தைத் தள்ளீரே;
                        அவர்கள் பாவத்தை
            மன்னிக்கிறிறோ மென்றீரே;
                        அடியேன் உமது
                        நல்லாவி காண்பிக்கும்
                        வழிக்குள்ளாகிறேன்;
                        ஆ, என்னை ரட்சியும்.

6.                     என் தவனத்துக்கு
            அச்சீவனின் தண்ணீரை
                        அளியும், கர்த்தரே;
            அத்தால் நான் நல்ல சீரை
                        அடைந்து புதிதாய்ச்
                        சிஷ்டிக்கப்படுவேன்
                        ஆ, இந்தப் பாக்கியம்
                        என்மேல் வரட்டுமேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு