16 October 2018

பெந்தேகொஸ்தின் ஆவியே


Gracious Spirit Holy Ghost
Charity

364                                                                 7, 7, 7, 5

1.         பெந்தேகொஸ்தின் ஆவியே,
            உம்மால் போதிக்கப்பட்டே,
            கேட்போம் உன்னத ஈவே,
                        தூய மெய்யன்பே.

2.         அன்பு யாவும் சகிக்கும்,
            தீதெண்ணாது சாந்தமும்,
            அது வெல்லும் சாவையும்;
                        அன்பை ஈயுமேன்.

3.         போதனையும் ஓய்ந்திடும்
            பூரண அறிவிலும்;
            அன்பே என்றும் நிலைக்கும்;
                        அன்பை ஈயுமேன்.

4.         காட்சியால் விஸ்வாசமும்,
            பூரிப்பால் நம்பிக்கையும்
            ஓயும், என்றும் ஒளிரும்
                        அன்பை ஈயுமேன்.

5.         அன்பு விசுவாசமும்
            நம்பிக்கை இம்மூன்றிலும்
            ஒப்பற்ற மேலானதும்
                        அன்பை ஈயுமேன்.

6.         தூய நேச ஆவியே,
            உம்மைப் போற்றும் தாசர்க்கே
            எங்கள் பேரில் அமர்ந்தே,
                        அன்பை ஈயுமேன்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...