தந்தை தன் சிறு மைந்தனை
179. Sawley, Watch C.M.
"As helpless as a child who clings"
1. தந்தை தன்
சிறு மைந்தனை
கையேந்தித் தாங்குவான்;
சீராட்டப் பெற்ற பாலகன்
அபாயம் நினையான்.
2. அவ்வாறே என்னை, பிதாவே,
காப்பாற்றித் தாங்குவீர்;
என் பலவீனம் நீங்கவும்
கையேந்தி வருவீர்.
3. மாதாவின் நேச மடியில்
சாய்ந்தாடும் குழந்தை
தாயாரின் முகம் பார்க்கையில்
மறக்கும் க்லேசத்தை.
4. அவ்வாறே, நேச ரக்ஷகா
உம்அருள் முகத்தை
நான் பார்க்க, ஸ்திரமாக்குவீர்
என் விசுவாசத்தை.
5. தாய்தந்தைப் பக்கம் பாலரை
உட்கார வைக்குங்கால்,
சந்தோஷித்துள்ளங் களிப்பார்
பெற்றோரின் அன்பினால்.
6. அவ்வாறே திருப்பாதத்தில்
ஆனந்தம் அடைந்தேன்;
மென் மேலும் அருள் நாதரே
பேரன்பை ருசிப்பேன்.
Comments
Post a Comment