கிறிஸ்துவின் வீரர் நாம்
We're soldiers of the King
SS 684
248 D.S.M. with refrain
1. கிறிஸ்துவின்
வீரர் நாம்;
ரத்தத்தால் மீட்டாராம்;
இப்போது சேனை சேர்ந்து நாம்
அவர்க்காய்ப் போர் செய்வோம்.
அபாயத்தினூடும்
மகிழ்ந்து பாடுவோம்;
தம் வீரரை நடத்துவோர்
நெஞ்சில் திடன் ஈவார்.
கிறிஸ்துவின்
- (வீரர்) - வீரர் நாம்,
புகழ்ந்து
- (போற்றி) - போற்றுவோம்;
நம்
மேன்மையுள்ள ராஜனை
எக்காலும்
சேவிப்போம்.
2. கிறிஸ்துவின் வீரர் நாம்;
அவரின் பேர் நாமம்
சிலுவை மேலாய் நின்றதாம்,
மாண்போடு தாங்குவோம்.
நஷ்டமும் லாபமே,
எந்நோவும் இன்பமே,
அவரின் நாமம் ஏற்றிடும்
கிறிஸ்துவின் வீரர்க்கே.
3. கிறிஸ்துவின் வீரராய்
அவர்க்காய் சகிப்போம்
வேதனை நிந்தை வெட்கமும்,
அவரோடாளுவோம்;
காலம் சமீபமே,
ஓங்கிப் போர் செய்வோமே;
மாண்பாகக் கிரீடம் சூடுவோம்
கிறிஸ்துவின் வீரரே.
Comments
Post a Comment