15 October 2018

கர்த்தாவே ஏழைப் பாவியை


117. Erfurt Wareham, Winchester.                                      L.M.

"Vom Himmel hoch da Komm..."

1.         கர்த்தாவே, ஏழைப் பாவியை
            நீர் கைவிடாமல் இத்தனை
            தாழ்வாய் என்னண்டை வந்தது
            அளவில்லாத தயவு.

2.         மா இன்பமுள்ள யேசுவே,
            மெய் ஆஸ்தியான உம்மையே
            நான் பெற்றுவாழ என்றைக்கும்
            என் நெஞ்சில் வாசமாயிரும்.

3.         உள்ளத்தில் ஜோதி வீசுவீர்;
            தேவன்பை நெஞ்சில் ஊற்றுவீர்,
            அஜ்ஜோதி இருள் நீக்குமே.
            அவ்வன்பு பயம் ஓட்டுமே.

4.         அதால் நான் மனத்திடனாய்
            இருந்து, மா சந்தோஷமாய்
            இவ்வுலகத்தை வெறுப்பேன்,
            கதியாம் உம்மைப் பற்றுவேன்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...