பிறந்தார் ஓர் பாலகன்


Unto us a Boy is born
Omega and Alpha

68                                                                                7, 6, 7, 7

1.         பிறந்தார் ஓர் பாலகன்
                        படைப்பின் கர்த்தாவே;
            வந்தார் பாழாம் பூமிக்கு
                        எத்தேசம் ஆளும் கோவே.

2.         ஆடும் மாடும் அருகில்
                        அவரைக் கண்ணோக்கும்;
            ஆண்டவர் என்றறியும்
                        ஆவோடிருந்த பாலன்.

3.         பயந்தான் ஏரோதுவும்
                        பாலன் ராஜன் என்றே;
            பசும் பெத்லேம் பாலரை
                        பதைபதைக்கக் கொன்றே.

4.         கன்னி பாலா வாழ்க நீர்!
                        நன்னலமாம் அன்பே!
            பண்புடன் தந்தருள்வீர்
                        விண் வாழ்வில் நித்திய இன்பே.

5.         ஆதி அந்தம் அவரே,
                        ஆர்ப்பரிப்போம் நாமே;
            வான் கிழியப் பாடுவோம்
                        விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு