பூலோக மீட்பர் யேசுவை


76. St. Spires; St. Cross                                    L.M.

"Behold the Saviour of mankind"

1.          பூலோக மீட்பர் யேசுவை;
            சிலுவைமீது நோக்குங்கள்;
            எவ்வளவாக மாந்தரே,
            நேசித்தாரென்று பாருங்கள்!

2.         முடிந்ததென்று யேசுவே
            உரைத்து ஜீவன் விட்டனர்;
            “தேவ குமாரன் இவரே”,
            என்று கண்டோர் விளம்பினர்.

3.         விண் ஜோதிகள் இருண்டன,
            திரை இரண்டாய்க் கிழிந்தது,
            கற்பாறைகள் பிளந்தன,
            இப்பூமியும் அதிர்ந்தது.

4.         எங்கள் நிமித்தம் வேதனை
            அன்பாய்ச் சகித்து மாண்டாரே;
            அவர் நிமித்தம் எங்களை
            நீர் ரட்சித்தாளும், தேவனே.    

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு