நிர்ப்பந்தமான பாவியாய்


Ich armer Mensch ich armer Sunder
Stella.  St. Matthias.  Melita

293                                                     8, 8, 8, 8, 8, 8

1.         நிர்ப்பந்தமான பாவியாய்
            நான் இங்கே தேவரீருக்கே
            முன்பாக மா கலக்கமாய்
            நடுங்கி வந்தேன், கர்த்தரே;
            இரங்குமேன், இரங்குமேன்,
            என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

2.         ஆ! என் குரூர பாவத்தால்
            மிகுந்த துக்கம் அடைந்தேன்;
            ஆ ஸ்வாமீ, துயரத்தினால்
            நிறைந்த ஏழை அடியேன்,
            இரங்குமேன், இரங்குமேன்
            என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

3.         என் குற்றத்துக்குத் தக்கதாய்
            செய்யாமல் தயவாய் இரும்;
            பிதாவே, என்னைப் பிள்ளையாய்
            இரங்கி நோக்கியருளும்;
            இரங்குமேன், இரங்குமேன்,
            என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

4.         என் நெஞ்சின் திகில் தணித்து,
            என்மேல் இரங்கி ரட்சியும்
            திவ்விய சந்தோஷம் அளித்து
            எப்போதும் கூடவே இரும்;
            இரங்குமேன், இரங்குமேன்,
            என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு