15 October 2018

நீரோடையை மான் வாஞ்சித்துக்


As pants the hart for cooling streams
Martyrdom

375                                                 C.M.

1.         நீரோடையை மான் வாஞ்சித்துக்
                        கதறும் வண்ணமாய்,
            என் ஆண்டவா, என் ஆத்துமம்
                        தவிக்கும் உமக்காய்.

2.         தயாள கர்த்தா, உமக்காய்
                        என் உள்ளம் ஏங்காதோ?
            உம் மாட்சியுள்ள முகத்தை
                        எப்போது காண்பேனோ?

3.         என் உள்ளமே, விசாரம் ஏன்?
                        நம்பிக்கைகொண்டு நீ
            சதா உன் ஜீவ ஊற்றேயாம்
                        கர்த்தாவை ஸ்தோத்திரி.

4.         நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா
                        குமாரன், ஆவிக்கும்,
            ஆதிமுதல் என்றென்றுமே
                        துதி உண்டாகவும்.



No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...