நீர் உத்தம சிநேகிதர்
Mein Herzens-Jesus meine Lust
Bavarian 117
266 8, 7,
8, 7, 8, 8, 7
(3-ஆம் பாகம்)
1. நீர் உத்தம
சிநேகிதர்,
என் நெஞ்சும்மேலே சாயும்;
நீர் உத்தம சகோதரர்,
நீர் என்னைப் பார்க்கும் தாயும்;
நீர் நோயில் பரிகாரியே,
உம்மாலே ஆறிப்போகுமே
என் காயமும் விடாயும்.
2. படையில் நீர் சேனாபதி,
வில் கேடகம் சீராவும்;
கரும் கடலில் நீர் வழி
காண்பிக்கும் சமுக்காவும்;
எழும்பும் கொந்தளிப்பிலே
நீர் என் நங்கூரம், இயேசுவே,
நான் ஒதுங்கும் குடாவும்.
3. நீர் ராவில் என் நட்த்திரம்,
இருளில் என் தீவர்த்தி;
குறைவில் நீர் என் பொக்கிஷம்,
தாழ்விலே என் உயர்ச்சி;
கசப்பிலே என் மதுரம்;
நான் தொய்ந்தால் மீண்டும் என் மனம்
பலக்க, நீர் என் சக்தி.
4. நீர் ஜீவனில் விருட்சமும்,
நீர் செல்வங்கள் பொழியும்
பூங்காவனமும், என்றைக்கும்
சுகம் தரும் கனியும்;
முள்ளுள்ள பள்ளத்தாக்கிலே
என் ஆவிக்கு நீர், இயேசுவே,
குளிர்ந்த பூஞ்செடியும்.
5. நீர் துக்கத்தில் என் ஆறுதல்,
நீர் வாழ்வில் என் களிப்பு;
நீர் வேலையில் என் அலுவல்,
பகலில் என் சிந்திப்பு;
நீர் ராவில் அடைக்கலம்,
நீர் தூக்கத்தில் என் சொப்பனம்,
விழிப்பில் என் குறிப்பு.
6. ஆ, ஒப்பில்லாதஅழகே!
நான் எத்தனை சொன்னாலும்
என் நாவினாலே கூடாதே;
நான் என்ன வாஞ்சித்தாலும்
அதெல்லாம் நீரே, இயேசுவே;
ஆ, தயவுள்ள நேசரே
நீர் என்றும் என்னை ஆளும்.
Comments
Post a Comment