நல் மீட்பர் இயேசு நாமமே


How sweet the Name of Jesus sounds
St. Peter

264                                         C.M.

1.         நல் மீட்பர் இயேசு நாமமே
                        என் காதுக்கின்பமாம்;
            புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
                        ஊற்றுண்ட தைலமாம்.

2.         அந்நாமம் நைந்த ஆவியை
                        நன்றாகத் தேற்றுமே;
            துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
                        திடப்படுத்துமே.

3.         பசித்த ஆத்துமாவுக்கு
                        மன்னாவைப் போலாகும்;
            இளைத்துப் போன ஆவிக்கு
                        ஆரோக்கியம் தந்திடும்.

4.         என் ரட்சகா, என் கேடகம்,
                        என் கோட்டையும் நீரே;
            நிறைந்த அருள் பொக்கிஷம்,
                        அனைத்தும் நீர் தாமே.

5.         மா நேசர், மேய்ப்பர், பர்த்தாவும்,
                        என் ஜீவனும் நீரே;
            என் தீர்க்கரும், என் ராஜாவும்
                        ஆசாரியருமே.

6.         என் நெஞ்சின் ஊக்கம் அற்பந்தான்,
                        என் அன்பில் குளிர்ந்தேன்;
            உன் முகம் பார்க்கும்போதோ நான்
                        சீராகப் போற்றுவேன்.

7.         இம்மையில் ஆயுள் முழுதும்
                        உம் அன்பைக் கூறுவேன்;
            உம் நாமத்தால் என் சாவிலும்
                        நான் ஆறித் தேறுவேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு