11 December 2020

விண்ணவனே மண்ணில் வந்தீர்

விண்ணவனே மண்ணில் வந்தீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

          விண்ணவனே மண்ணில் வந்தீர்

            விண் மகிமை துறந்து வந்தீர்

            விண்ணிலே எம்மை சேர்த்திடவே

            விந்தையாய் பிறந்தீர் இயேசைய்யனே

 

                        படைக்கிறோம் எம்மையே உமக்காய்

                        காணிக்கையாக படைக்கிறோம்

 

1.         கன்னிமரியின் மகனாய் இம்மண்ணின் வேந்தனாய்

            கந்தை துணி பொதிய ஏழ்மை கோலமாய்

            விந்தை தாங்கி ஜெனித்தீர் அன்பின் ரூபமாய்

            மந்தை மேய்ப்பர் தொழுதிட பாரில் பிறந்தீர்

            மன்னன் இயேசுவே நீர் மன்னாதி மன்னவரே

            மண்ணோராம் எமக்காய் பாரில் பிறந்தவரே

            விண் தூதரோடு தேவப் பிள்ளைகளாய்

            பாடி துதிக்கிறோம் நன்றியோடு

 

2.         வாழ்வு தரும் இயேசுவே நீர் தேவமைந்தனாய்

            வந்தோர்க்கெல்லாம் இரட்சிப்பை அருள்பவரே

            சமாதானம் தந்திடும் பிரபு நீரே

            சந்தோஷம் தருவீர் உம் ஜனங்களுக்கே

            சர்வ வல்லவர் நீர் ராஜாதி ராஜாவே

            சர்வத்தை சிருஷ்டித்த சிருஷ்டி கர்த்தர் நீரே

            சாவின் கூர் முறித்து பாவ சாபத்தையும்

            அழிக்க பிறந்தீர் ஸ்தோத்திரமே

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...