08 December 2020

சில்லென்ற வெண்பனி விண்ணுலகின் கண்மணி

சில்லென்ற வெண்பனி விண்ணுலகின் கண்மணி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

          சில்லென்ற வெண்பனி விண்ணுலகின் கண்மணி

            வானகராம் இயேசு பிறந்தார்

 

            கன்னி என்னும் தாரகை கைக்காட்டும் திசையிலே

            புல்லணையில் பூவென புனிதர் பிறந்தார்

            ஆயர்களோ ஆவலில்

            ஞானயர்கள் அருகினில்

            கந்தலிலே வைரம் என இயேசு பிறந்தார்

 

1.         நெஞ்சங்கள் நேசங்களில் வாசம் கமழுதே

            பல சொந்தங்கள் நட்புடனே இல்லம் மகிழுதே

            வீட்டுக்குள்ளே குடும்பத்துடன் விண்மீன்கள் மினு மினுக்க

            கிறிஸ்மஸ் மரம் ஒன்று ஜொலிஜொலிக்குதே

            பிள்ளைகளோ மகிழ்ந்திருக்க பெற்றவர்கள் நெகிழ்ந்திருக்க    

            சந்தோசம் சதிராட ஹாப்பி கிறிஸ்மஸ்

            ஆனந்தம் பண்பாட மேரி கிறிஸ்மஸ்

 

2.         எண்ணங்கள் எங்கெங்கோ சிறகை விரிக்குதே

            புது வண்ணங்கள் பூமி எங்கும் மலர்ந்திருக்குதே

            மின் வண்ண ஜாலரங்கள் என்னென்ன தோரணங்கள்

            இரவொன்று பகலாக ஒளிரக் கண்டோமே

            ஆலயத்தில் ஆராதனை ஆனந்தமாய் கீர்த்தனை

            புத்தாடை சொர சொரக்க ஹேப்பி கிறிஸ்மஸ்-இந்த

            பூமிக்கு கொண்டாட்டம் மேரி கிறிஸ்மஸ்

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...