மலரே எமக்காக இப்பூவில் மலர்ந்தாயோ
மலரே எமக்காக
இப்பூவில்
மலர்ந்தாயோ
குளிரில்
அன்னை மரி
மடியில்
விண்தூதர்
சேனைகள் துதி பாடிட
மலர்ந்தாயே
இம்மானுவேலாய்
- மலரே
1. நடு
இரவில் கடுங்குளிரில்
மேய்பர்க்கு
நற்செய்தி தூதர்
சொன்னார்
புல்லணையின்
மீதினிலே
இறைமகன் ஏழ்மையாய்
பிறந்தார் என்று
கந்தையில்
உறங்கும் பாலகனை
மேய்ப்பர்கள்
கண்டு தொழுதாரே
விண்ணிலும்
மண்ணிலும் மகிமை
என
தூதரும் பாடிப்
புகழ்ந்தாரே
நாமும்
தொழுவோம் பாலனை
பணிவோம்
(1. நடு
இரவில் கடுங்குளிரில்
மேய்பர்க்கு
நற்செய்தி தூதர்
சொன்னார்
மானிடரை காப்பதற்கு
இறைவன்
மனிதனாய் பிறந்தார்
என்று
விண்ணிலே தேவனுக்கே
மகிமை
பூமியிலே சமாதானம்
மானிடர்
மேல் பிரியம் என்று
பாடியே
தூதர் மறைந்தாரே
மேய்ப்பர்
அவரை கண்டு மகிழ்ந்தார்)
2. ஞானியர்க்கு
வழிக்காட்ட
வானில்
விடிவெள்ளி
தோன்றியதே
பெத்தலையின்
பாலகனை
இத்தரை மீதினில் கண்டாரே
பொன்
போளத் தூபவர்கத்தனை
காணிக்கையாக
படைத்தாரே
யாக்கோபின்
விடிவெள்ளி
இவரே என்று
பணிந்து
அவரைத் தொழுதாரே
நாமும்
தொழுவோம் பாலனை
பணிவோம்
(2. வானத்திலே
விண்மீனை
கண்டே
ஞானிகள்
வந்தனரே
பூவூலகின்
மீட்பர் இவர் என்றே
போற்றி
புகழ்ந்தனரே
பொன்
போளத் தூபவர்கத்தையும்
காணிக்கையாக
படைத்தனரே
விண்
ஆளும் தேவ மைந்தனையே
கண்ணாறக்
கண்டு மகிழ்ந்தனரே
நாமும்
சென்று அவர் பாதம்
தொழுவோம்)
தமிழ்
கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment