பெத்லகேமில் தூதர் தொனி

பெத்லகேமில் தூதர் ஒலி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பெத்லகேமில் தூதர் தொனி

            கெம்பீரமாய் முழங்கிட

            செய்தி ஒன்று அறிவிக்குதே

            மந்தை மேய்ப்பர் நடுங்கிட

            ஞானிலமும் மகிழ்ந்திட

            நற்செய்தி பரவிடுதே - 2

 

                        வானம் எங்கும் மகிழ்ச்சி வெள்ளம்

                        ஆனந்தத்தால் நிறையும் உள்ளம் - 2

                        பிறந்திட்டார் இயேசு மாடடை குடிலினில்

                        தவழ்கிறார் தேவன் மரியின் மடியில் - 2

 

1.         நமக்கு ஒரு பாலகன் பிறந்துள்ளார்

            நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் - 2

            கர்த்தத்துவம் தோளின்மேலிருக்கும்

            ராஜரீகம் என்றும் அவர்க்-குரியதாகும் - 2 - வானம்

           

2.         அவர் நாமம் அதிசயமானதே

            ஆலோசனைக் கர்த்தரும் இவரே - 2

            சமாதான பிரபு இவரே

            மேசியா தேவன் இவர்தாமே - 2 - வானம்

 

3.         நித்திய வாழ்வு நிலைத்தோங்க

            நீதியின் சூரியன் தோன்றியுள்ளார் - 2

            இம்மானுவேல் இவரே

            என்றும் நம்மோடிருப்பவர் இவர்தானே - 2 - வானம்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே