09 December 2020

ஆதவன் எழுகின்றதே உலகத்தின்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    ஆதவன் எழுகின்றதே

                        உலகத்தின் இருள் மாற

                        பாவத்தின் கறை அகல

 

1.         மானுடம் மதி மயங்கி மாயையில் மடிகின்ற

            அலைகடல் நீரினாலும் மாதவம் புரிந்தாலும்

            அன்பினில் மூழ்கினாலும் மனமது ஓயாது

            தூயனை காணாமல் துயில்கின்ற

            பூவூலகில் இருளாய் போனதே எந்தன் இமைகள் மூடுதே

            அடிமடியில் தவழுகின்ற மனு உருவாய் அவதரித்தார்

 

2.         விடியலை எதிர்நோக்கி வருமென காத்திருக்கும்

            தொலைகடல் காணாமல் அலைகின்ற வாழ்க்கையிலே

            ஒருமுறை மனம் உறுகி விரும்பியே ஏற்றுக் கொண்டால்

            அன்பால் அனைப்பாரே மன ஆறுதல் அளிப்பாரே

            வாழ்க்கையே மாறுமே வசந்தம் தோன்றுமே

            வாழ்க்கையே மாறுமே உன்னில் வசந்தம் தோன்றுமே

            விண்ணகத்தில் உன்னை சேர்க்க மண்ணுலகில் அவதரித்தார்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...