மேசியாவே மேசியாவே பூலோகம் வந்தீரே

மேசியாவே மேசியாவே பூலோகம் வந்தீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

                    மேசியாவே மேசியாவே பூலோகம் வந்தீரே

                        பூலோகம் வந்தீரே

                        நாங்களும்தான் பாடனும்

                        நாங்களும்தான் ஆடனும்

                        உம்முடைய பிறப்பை கொண்டாடனும்

 

1.         பெத்தலகேம் என்னும் ஊரினிலே

            இரட்சகர் மனுவாக மலர்ந்ததாலே

            வானவர்கள் வாழ்த்திடவே

            வையகமும் மகிழ்ந்திடவே

            கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டமே

            ஹப்பி கிறிஸ்மஸ் மெரி கிறிஸ்மஸ் ஹப்பி கிறிஸ்மஸ்

 

2.         பூலோக மாந்தர்க்கு நற்செய்தியை

            சந்தோசம் சமாதானம் பெருகிடவே

            கந்தை துணி முன்னணையில்

            இறை மைந்தன் உறங்கிடவே

            அன்னை மரி தாலாட்டில் மகிழ்ந்தாரே

            ஹப்பி கிறிஸ்மஸ் மெரி கிறிஸ்மஸ் ஹப்பி கிறிஸ்மஸ்

 

3.         மன்னிப்பின் மாட்சிமை உண்டெனவே

            உணர்த்திட்ட தேவ மைந்தன் பிறந்தநாளே

            எண்ணில்லா நன்மைகள் என்றென்றும் கிடைத்திடவே

            மன்னிப்போம் மகிழ்வோடு தவறுகளை

            ஹப்பி கிறிஸ்மஸ் மெரி கிறிஸ்மஸ் ஹப்பி கிறிஸ்மஸ்

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு