மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே

மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

          மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே

            பயம் வேண்டாம்

            நற்செய்தி ஒன்று நான் அறிவிப்பேன்

            பயம் வேண்டாம்

 

                        பெத்லேகேம் தொழுவத்தில்

                        பயம் வேண்டாம்

                        ரட்சகனாய் பிறந்ததை

                        மகிழ்ச்சியாய் அறிவிப்போம் - மந்தை

 

1.         ஏசாயா தீர்க்கர் உரைத்தப் படி

            ஏழ்மையின் கோலமாய்

            கன்னி மரியின் மடியினில்

            பிறந்தார் இயேசு பாலன் - 2

 

                        பிறந்தார் இயேசு பாலன்

                        கன்னியின் மடியினில் - 2 - மந்தை

 

2.         ஒளியாய் உலகில் உதித்திட்டார்

            விழிப்போல் நம்மை காத்திட

            அழியா வாழ்வை தந்திட

            அவனியில் பிறந்தார் இயேசு - 2

 

                        அவனியில் பிறந்தார் இயேசு

                        அழியா வாழ்வை தந்திட - 2 - மந்தை

 

3.         மானிடர் பாவம் தீர்த்திட

            மனிதனாய் பாவமானார்

            அன்பின் சொரூபியாம் இயேசுவை

            என்றும் போற்றி பாடுவோம் – 2

 

                        என்றும் போற்றி பாடுவோம்

                        அன்பின் சொரூபியாம் இயேசுவை - 2 - மந்தை

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு