09 December 2020

எங்கள் இயேசு இரட்சகர்

எங்கள் இயேசு இரட்சகர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

                    எங்கள் இயேசு இரட்சகர்

                        பூவூலகில் மரியின் பாலகனாய்

                        வந்து பிறந்த நாளை கிறிஸ்மசாக

                        கொண்டாடி பாடுகின்றோம்

                        புல்லணையில் பிறந்தாரே பொன் பாலனை வணங்குவோம்

                        இனி நமக்கு மிகுந்த சமதானத்தை அள்ளி தந்தாரே

                        எங்கள் பாவ மரண சாப துன்பங்கள் தீர்ந்து போகுமே

 

1.         இதோ உலக பாவம் அனைத்தும் சுமக்கும் ஆட்டுக்குட்டி

            நம்மை தேடி வந்த இயேசு பாலனை எழுந்து கண்டடைவோம்

            கீழ் வானில் நட்சத்திரம் கண்ணில் தோன்றியதும்

            ஞானியர் எரோதின் மாளிகை ஏறினதும்

            கோபத்தினால் வேதனையால்

            கலங்கினானே மயங்கினானே ஏரோது அரசன்

            இயேசு பாலனை கொன்றுவிட சூழ்ச்சிகள் செய்துவிட்டான்

            சாஸ்திரிகள் திரும்பி வந்து சொல்ல சொல்லிவிட்டான்

           

2.         மேசியாவின் உதயம் கண்டு தூதர் மகிழ்ந்தனர்

            அந்தக் காட்சி கண்டு ஆட்டிடையர் ஆடிப்பாடினர்

            ஞானியர் கொண்டு வந்த காணிக்கை பொருளெல்லாம்

            பொன் வெள்ளை போளமுடன் தூபவர்க்கமதை

            பணிவுடனே படைத்தனரே பாலகனின் ஆசியுடன் வீடு திரும்பினர்

            ஜீவ ஒளி வெளிச்சமேதான் உலகமெங்கிலும்

            பேரொளிதான் இயேசு பாலனின் பாதம் சென்றிடுவோம்

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...