கண்மணியே கண்மணியே கண்ணுறங்கு கண்மணியே

கண்மணியே கண்மணியே கண்ணுறங்கு கண்மணியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

                   கண்மணியே கண்மணியே கண்ணுறங்கு கண்மணியே

                        பொன்மணியே கண்மணியே விண்துறந்த எங்க பொன்மணியே

                        எங்கள் வாழ்வோடு கலந்த வான் மகனே

                        எங்கள் வாசம் வீசும் ரோசாவே, யூதர் குல ராசாவே

 

1.         இத்தரையின் இரட்சகராம் எங்கள் உரு சிருஷ்டிகராம்

            பெத்தலேகேம் சத்திரத்தில் இடம் இல்லையே

            சத்திய மார்கத்தைக் காட்டி நித்தம் நித்தம் கண்ணை வைத்து

            பத்திரமாய் பேணிக் காக்கும் தெய்வமல்லவா

            வானகமும் வையகமும் ஆராதிக்கும் தேவசுதன்

            காலமெல்லாம் வாழ்க்கையெல்லாம் இரட்சகரின் அன்பே போதும்

            பாவம் போக்க வந்த பரிசுத்தரே

            இயேசுவே எங்கள் மீட்பரே

 

2.         மாறி மாறிப் போகும் இந்த பாரில் உள்ள மாந்தர்களை

            பாசம் காட்டி பாதைக் காட்டி சென்றதென்னவோ

            தன்னுயிரைத் தந்து நித்திய ஜீவனையே ஈந்து

            என்னில் அன்புகூர்ந்த பிதாவின் செல்லப்பிள்ளையே

            அன்பே உந்தன் பூமுகத்தை காணக் காண கோடி இன்பம்

            ஆறுதலே ஆனந்தமே ஆரிராரோ பாடட்டுமா

            அன்புதனில் பிறந்த அன்பு தெய்வமே

            இயேசுவே எங்கள் மேய்ப்பரே

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு