09 December 2020

உதித்தாரே நல்ல மேய்ப்பர்

உதித்தாரே நல்ல மேய்ப்பர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

          உதித்தாரே நல்ல மேய்ப்பர்

            புல்லணை மீதினிலே

            விண்ணகம் துறந்து மண்ணகம் வந்த

            இம்மானுவேலன் இவர்தானே

 

                        விண்ணிலே தேவனுக்கே மகிமை

                        பூமியிலே சமாதானம்

                        மனிதர்மேல் பிரியமும்

                        இன்றும் என்றும் உண்டாவதாக

 

1.         மந்தையை காத்த மேய்ப்பர்களும்

            சிந்தையில் சிறந்த ஞானியரும்

            பாலனை சென்று பணிந்ததுமே நல் காணிக்கை அவருக்கு படைத்தனரே

            உன்னையும் என்னையும் மீட்டிடவே பூமியில் வந்த அதிசயமே

            எண்ணில் அடங்கா நன்றியுடன் அவரைப் போற்றி துதித்திடுவோம்

 

2.         அன்பே அவரின் திருமொழியாம்

            பண்பில் சிறந்த போதகராய்

            நம்மை அனைத்து காத்திடவே

            ஏழையின் கோலம் எடுத்தாரே

            விண்ணவர் வாழ்த்துரை கேட்டிடவே

            எண்ணில்லா ஆனந்தம் பெருகினதே

            வல்லவர் இயேசு பிறந்த நாளில்

            வாழ்த்துகள் சொல்லி மகிழ்ந்திடுவோம்

           

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...