09 December 2020

நட்சத்திரம் வழிகாட்ட வழியானவர் பிறந்தாரே

நட்சத்திரம் வழிகாட்ட வழியானவர் பிறந்தாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

            நட்சத்திரம் வழிகாட்ட வழியானவர் பிறந்தாரே

            ராஜாக்கள் பணிந்து விழ யூத ராஜசிங்கம் பிறந்தாரே

            தீர்க்கர் சத்தியத்தை வெளிப்படுத்த சத்தியமானவர் பிறந்தாரே

            பிறந்தாரே பூமியிலே பிறந்தாரே இயேசுபரன்

 

                        ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்

                        ஹப்பி கிறிஸ்மஸ் கொண்டாடுவோம்

                        மேரி மேரி கிறிஸ்மஸ் ஹப்பி ஹப்பி கிறிஸ்மஸ்

 

1.         தூதர்கள் துதி கீதம் பாட துதிக்கு பாத்திரர் பிறந்தாரே

            ஆராரோ மரியன்னை பாட தாயானவர் பிறந்தாரே

            இடையவர் கூட்டம் பணிந்து விழ நல்ல மேய்ப்பன் பிறந்தாரே

            ஆலய திரைகள் கிழித்தெறிய மணவாளன் பிறந்தாரே

 

2.         மண்பாண்ட மனிதன் துதித்துப் பாட பரம குயவன் பிறந்தாரே

            பனித் தூரல்கள் பூவாய் உதிர மன்னவனாக பிறந்தாரே

            ஏரோது ராஜா கதி கலங்க விண்ணக ராஜா பிறந்தாரே

            பரிசேயர் முகத்திரை கிழித்தெறிய இயேசு கிறிஸ்து பிறந்தாரே

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...