11 December 2020

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

                   இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே

                        வார்த்தை இன்று மனிதனாக பூமியில் பிறந்தாரே

                        புதுமலர் பூக்க நறுமணம் வீச இதயங்கள் வாழ்த்த

                        இறைமகன் வந்த கிறிஸ்மஸ் நாளிது - இரட்சகர்

 

1.         விண்ணகத்து வேந்தனுக்கு தலைசாய்க்க இடமில்லை

            மாடிடை குடிலில் தானே புல்லணை கிடைத்தது - 2

            நம்மை மீட்க ஏழை உருவில் இம்மானுவேலன் வந்தார்

            இமைப் போல நம்மைக் காக்க இறைமகனாய் இன்று பிறந்தார் - 2

            அன்னை மரியின் தாலாட்டில் கண்கள் மூடித் தூங்கிடவே

            விண்ணில் மின்னும் தாரகையெல்லாம் கண்கள் சிமிட்டி சிரித்திடவே - இரட்சகர்

 

2.         மலையும் பள்ளத்தாக்குகளும் பூத்துக் குலுங்கும் சிறுமலரும்

            தேவன் பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சியில் துள்ளிடுதே - 2

            புள்ளிமானும் சின்ன குயிலும் அழகாய் ஆடும் மயிலும்

            உயிர்கள் யாவும் மகிழ உலகில் வந்த அழகே

            உந்தன் பிறந்த நாளில் என் மனம் துள்ளி துள்ளி மகிழ்கிறதே

            கண்கள் பணிந்து கரங்கள் கூப்பி உம்மை வணங்கி போற்றிடுதே - இரட்சகர்

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...