10 December 2020

புல்லணையில் வந்து பிறந்தாரே

புல்லணையில் வந்து பிறந்தாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

          புல்லணையில் வந்து பிறந்தாரே

            பரலோக ராஜா இவர்

            பூமியிலே வந்து ஜெனித்தாரே

            விண்ணக மைந்தர் இவர்

 

                        அவர் மேசியா அவர் இரட்சகர்

                        அவர் இம்மானுவேல் அவர் இயேசு

 

1.         சத்திரத்திலே இடமில்லையே

            சர்வ வல்ல தேவனுக்கு

            முன்னணையில் இடம் கொடுத்தார்

            முன்குறித்த மன்னனுக்கு

            நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமா

            சிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய்

 

2.         நட்சத்திரமும் அறிவித்ததே

            மேசியா பிறப்பதனை

            சாஸ்திரியரும் விரைந்தனரே

            பாலனை பணிந்திடவே

            நீயும் இயேசுவை அறிவிக்க ஆயத்தமா

            மாந்தர்கள் அவர் நாமம் பணிந்திடவே

 

3.         வெள்ளைப்போலமும் தூபவர்க்கமும்

            ஞானியர் கொண்டு வந்தார்

            வானம் பூமியும் படைத்தவருக்கு

            அது காணிக்கை யாகிடுமா?

            நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமா

            சிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய்

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...