06 May 2019

அருட்கடலே வரந் தர இது சமயமே

கி.கீ:313

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             வரந் தர இது சமயமே

 

313. (312) தன்யாசி                              ஆதி தாளம்

 

                             பல்லவி

 

                   அருட்கடலே, வரந் தர இது சமயமே;

                        ஐயனே, அருள் தாரும்.

 

                             சரணங்கள்

 

1.         சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே,

            கரங்களில் தாசனைக் காத்திடும், தேவா. - அருட்

 

2.         பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே,

            உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க. - அருட்

 

3.         அன்போடு யேசுவை ஆவியோடு பேச,

            இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய. - அருட்

 

4.         திரியேக தேவா, திருச்சபை பெருக,

            அறிவுட னாளும் அன்பர் கோனாக. - அருட்

 

5.         அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமா,

            சந்ததம் வாழ, சபைகளுஞ் செழிக்க. - அருட்

 

 

- யே.சா. டெய்லர்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...