18 May 2019

கரை ஏறி உமதண்டை


70.     “Must I go and empty handed?”        (789)

1.         கரை ஏறி, உமதண்டை
            நிற்கும்போது ரக்ஷகா!
            உதவாமல், பலனற்று,
            வெட்கப்பட்டுப் போவேனோ?

பல்லவி

                                    ஆத்மா ஒன்றும் ரக்ஷிக்காமல்
                                    வெட்கத்தோடே ஆண்டவா!
                                    வெறுங் கையனாக; உம்மைக்
                                    கண்டுகொள்ளல் ஆகுமா?

2.         ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
            வைத்திராமல் சோம்பலாய்க்
            காலங் கழித்தோர் அந்நாளில்
            துக்கிப்பார் நீர்ப்பந்தராய்.

3.         தேவரீர் கைதாங்க சற்றும்
            சாவுக்கஞ்சி கலங்கேன்,
            ஆயினும் நான் பலன் காண
            உடைக்காமற் போயினேன்!

4.         வாணாள் எல்லாம் வீணாளாகச்
            சென்று போயிற்றே; ஐயோ!
            மோசம் போனேன்! விட்ட நன்மை
            அழுதாலும் வருமோ!

5.         பக்தரே! உற்சாகத்தோடு
            எழும்பி ப்ரகாசிப்பீர்!
            ஆத்துமாக்கள் யேசுவண்டை
            வந்துசேர உழைப்பீர்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...