18 October 2018

வாதையுற்ற மீட்பரே


Hohes Heilges Marterbild

SP S 11

114                                         7, 7, 7, 7, 7, 7

1.         வாதையுற்ற மீட்பரே,
            என் அடைக்கலம் நீரே;
            நான் என் பாவப் பாரத்தால்
            தொய்ந்துபோய்க் கலங்கினால்,
            என் அடைக்கலம் நீரே,
            வாதையுற்ற மீட்பரே.

2.         நியாயத் தீர்ப்பில் என் எல்லா
            புண்ணியமும் விருதா;
            தளரா முயற்சியால்,
            மனஸ்தாபக் கண்ணீரால்
            குற்றம் நீங்காதென்றைக்கும்
            கிருபைதான் ரட்சிக்கும்.

3.         உள்ளவண்ணம் அண்டினேன்,
            அன்பாய் என்னை நோக்குமேன்
            திக்கற்றோன் நான், ரட்சியும்;
            அசுத்தன் நான், கழுவும்
            மூடும் என் நிர்வாணத்தை;
            எழைக்கீயும் செல்வத்தை.

4.         வாதையுற்ற மீட்பரே,
            என் அடைக்கலம் நீரே,
            என் இக்கட்டனைத்திலும்,
            சாகும் தருணத்திலும்
            என் அடைக்கலம் நீரே,
            வாதையுற்ற மீட்பரே.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...