தந்தை தன் சிறு பாலனை
As helpless as a child who clings
Waldrons
346 C.M.
1. தந்தை தன்
சிறு பாலனை
கையேந்தித் தாங்குவான்;
சீராட்டப் பெற்ற பாலகன்
அபாயம் நினையான்.
2. அவ்வாறே என்னை, தந்தையே,
காப்பாற்றித் தாங்குவீர்;
என் பலவீனம் நீங்கவும்
கையேந்தி வருவீர்.
3. மாதாவின் நேச மடியில்
சாய்ந்தாடும் குழந்தை
தாயாரின் முகம் பார்க்கையில்
மறக்கும் கிலேசத்தை.
4. அவ்வாறே, நேச ரக்ஷகா
உம் அருள் முகத்தை
நான் பார்க்க, ஸ்திரமாக்குவீர்
என் விசுவாசத்தை.
5. தாய் தந்தைப் பக்கம் பாலரை
உட்கார வைக்குங்கால்,
சந்தோஷித்துள்ளம் களிப்பார்
பெற்றோரின் அன்பினால்.
6. அவ்வாறே திருப் பாதத்தில்
ஆனந்தம் அடைந்தேன்;
மென்மேலும் அருள் நாதரே
பேரன்பை ருசிப்பேன்.
Comments
Post a Comment