18 October 2018

விண் போகும் பாதை தூரமாம்


We have not seen we cannot see

Beulah

145                                                C.M.

1.         விண் போகும் பாதை தூரமாம்
                        என்றே நாம் எண்ணுவோம்;
            பகைஞரின் கொடூரமாம்
                        வன்மையை உணர்வோம்.

2.         ஆனால் எப்பாடும் பாவமும்
                        இல்லா அவ்விண்ணையே
            நாம் கண்டிலோம், நாம் காணவும்
                        இம்மையில் கூடாதே.

3.         சிற்றின்பத்தை வெறுத்தாலும்,
                        உள்ளத்தை முற்றும் நாம்
            கர்த்தாவுக் கொப்புவித்தலும்
                        அரிதென் றெண்ணலாம்.

4.         ஆனாலோ, பாவம் நீக்கிட
                        அகோர வேதனை
            மீட்பர் அடைந்து மாண்டதும்
                        நாம் காணக் கூடாதே.

5.         பக்தன் தோமாவே, உன் போலும்
                        கண்ணால் காணாமலே
            விஸ்வாசம் தக்கதாயினும்
                        சந்தேகம் கொள்வோமே.

6.         என்றாலும், 'காணாதிருந்தும்
                        விஸ்வாசித்தோர் பாக்கியர்'
            என்றே நீ பெற்ற வாக்கையும்
                        நாங்களும் சார்ந்தவர்.

(265 பாவும் பொருத்தமானது)

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...