30 June 2023

வாழ வேண்டும் பரமனே

வாழ வேண்டும் பரமனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

பல்லவி

          வாழ வேண்டும் பரமனே

            உமது வழியில்

            உமது ஒளியில்

            வாழ வேண்டும் பரமனே

 

அனுபல்லவி

                        தீயர் வழியில் நடந்திடாமல்

                        கயவரோடு கலந்திடாமல்

                        வீணரோடு இசைந்திடாமல்

                        உந்தன் வேதம் நெஞ்சில் ஏற்றி

 

சரணங்கள்

1.         உமது வேதம் எனது தியானம்

            ஆத்ம நேசம் ஆகணுமே

            நதியருகே கனி மரமென

            நிலைத்து வாழ அருளே

            வேர்கள் ஊன்றி பசுமை தாங்கி

            வளர்ந்து ஓங்கும் தருவாய் மாறி

            செய்வதெல்லாம் என்றும் வாய்க்க

            சீரும் சிறப்பும் என்றும் நிலைக்க

 

2.         தேவரீர் நீர் எனது தீபம்

            இருளை வெளிச்சம் ஆக்கிடுவீர்

            சேனைக்குள்ளும் பாய்ந்திடுவேனே

            மதிலும் தாண்டி வெல்வேன்.

            வலது கரத்தால் என்னைத் தாங்கி

            மானின் கால்கள் எனக்கு அருளி

            கன்மலை மேல் நிறுத்துவீரே

            காருண்யரே உம்மைத் துதிப்பேன்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

கண்களை ஏறெடுப்பேன் என்

கண்களை ஏறெடுப்பேன் என்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கண்களை ஏறெடுப்பேன்

                        என் கண்களை ஏறெடுப்பேன்

                        அல்பா, ஓமேகா என் தேவன் நீர்

                        கண்களை ஏறெடுப்பேன்

1.         துன்பங்கள் வரும்போது

            உன் வேதனைகளில்

            திடன்கொள் மகனே

            உன்னை அழைத்தவர் காத்திடுவார்

 

            துன்பங்கள் சூழ்ந்தாலும்

            தனிமையில் நான் நடந்தாலும்

            அஞ்சிடேன் கர்த்தரை நோக்கிடுவேன்

            அவரே என் ஆதரவே


2.         நம்பிக்கை அற்ற (இழந்த) நேரம்

            நீ தனிமையில் இருக்கும் பொழுது

            என் அப்பா அருகில் வருவார்

            கலங்காதே மகனே

 

3.         நன்மையும் கிருபையும்

            என்னை என்றும் தொடருமே

            என் இருதயம் உமையே சார்ந்திருக்கும்

            உம்மில் நான் செழித்திருப்பேன்

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...