187. இராகம்: பந்துவராளி ஆதிதாளம் (431)
பல்லவி
வேதா; தயை நிறை தாதா[1],-ஏசு
நாதா,
அருள் தா.
அனுபல்லவி
போதா மனுடர்கள் பரி பவம் அற, நரனாய்[2] தீயன்
போலே துயர் அடைந்த மாதயை
யாலே மரித்தெழுந்த தேவனே. - வேதா
சரணங்கள்
1. என் தன் நீதி ஓர் கந்தை அல்லவோ, பரனே?-ஏழைக்
கேது துணை உன் தன் தாரகம்[3] அன்றி,
தற்பரனே?
வந்தடைந்தனன்
உன்தனை; அன்பு
தந்தரவணைத்
தெந்தனைத் தய
வாக உரு பவம் அடங்கலும்;
போகத் துய்யன்[4] ஆகவே
என்றும் - வேதா
2. பாவம் தென்தனை
மேவிக் கெடுத்ததே, தேவா; உன்தன்
பற்ற தல்லா
தினி உற்றதுணை இல்லை கா, வா;
சாவுவரில் என்
ஆவி கலங்கித்
தவித்திடாமலே
களித்து; நன்ம
தாகப் பர[5]கதியை
நோக்கி அங்
கேக, நித்திய
பாகம் அடைய - வேதா
- ஜாண் பால்மர்
No comments:
Post a Comment