28 September 2023

இயேசுவே நீர் மாறாதவர்

இயேசுவே நீர் மாறாதவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   இயேசுவே நீர் மாறாதவர்

                        ஆனாலும் என்னை மாற்றுபவர்

                        உம் வார்த்தை என்றும் மாறாததே

                        அது எந்தன் வாழ்வை மாற்றிடுதே

                        தேற்றிடுதே

 

1.         செங்கடல் போன்ற போராட்டத்தை

            ஜெயம் பெற்ற வாழ்வாய் மாற்றுபவர்

            யோர்தானின் பெருவெள்ள கண்ணீர்தனை

            ஆனந்த களிப்பாக மாற்றுபவர்

            தேற்றுபவர்

 

2.         குறைவென்ற வாழ்வின் தண்ணீர்தனை

            நிறைவென்ற இரசமாய் மாற்றுபவர்

            மாறா போல் கசந்த பாதைதனை

            மதுரம்போல் இனிப்பாக மாற்றுபவர்

            தேற்றுபவர்

 

3.         உலர்ந்திட்ட வாழ்க்கையின் செல்வங்களை

            உயிர்ப்பெற்ற சேனையாய் மாற்றுபவர்

            வறண்டிட்ட வாழ்க்கையின் பாதைதனை

            வற்றாத நீரூற்றாய் மாற்றுபவர்

            தேற்றுபவர்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...