378. இராகம்: சங்கராபரணம் ஆதி தாளம் (502)
பல்லவி
அருணோதயம்
செபிக்கிறேன் அருள்பரனே கேளுமேன்
ஆவி வரம் தாருமே-என் யேசுவே
சரணங்கள்
1. கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர் தெய்வமே
கரங்குவித்துத் தோத்தி ரிக்கிறேன்-என்
யேசுவே
சிரங்குனிந்து[1] தோத்திரிக்கிறேன்
- அருணோ
2. இந்த நாளைக் காணச் செய்தீர் இரக்கமுள்ள தெய்வமே
இதற்காயும்மைத் தோத்தி ரிக்கிறேன்-என்
யேசுவே
இதயத்தாலும் தோத்திரிக்கிறேன் - அருணோ
3. கதிரவன் எழும்பிவரும் முறையின்படியே என்மேலே
கர்த்தரே நீர் ப்ரகாசித்திடும்-என் யேசுவே
நித்தம் நித்தம் ப்ரகாசித்திடும் - அருணோ
- அருள்திரு. ச. தாவீது
No comments:
Post a Comment