ஜெபத்தைக் கேட்பவரே உம்மிடம் வருகின்றேன்

ஜெபத்தைக் கேட்பவரே உம்மிடம் வருகின்றேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   ஜெபத்தைக் கேட்பவரே

                        உம்மிடம் வருகின்றேன்

                        பதிலை தருபவரே

                        உம் பாதம் பணிகின்றேன்

 

1.         காலை உம் கிருபையை கேட்கப்பண்ணும்

            நான் நடக்கும் வழியை காணச் செய்யும்

            வேதத்தின் அதிசயம் பார்க்கும் படி

            என் அகத்தின் கண்களை திறந்தருளும்

            கால்கள் வலுவாமல் ஸ்திரப்படுத்தும்

                        ஜெபம் கேளும்

                        பதில் தாரும்

 

2.         எந்தன் வாய்க்கு காவல் வையும்

            என் உதட்டின் வார்த்தையைக் காத்துக் கொள்ளும்

            சுத்த இதயத்தை தினம் சிருஷ்டியும்

            என்னில் நிலைவர ஆவியை புதிதாக்கிடும்

            பாவி என்மேல் கிருபைக் காட்டும்

                        ஜெபம் கேளும்

                        பதில் தாரும்

 

3.         தேவரீர் என்னை ஆசீர்வதித்து

            என் எல்லையை எங்கும் பெரிதாக்கிடும்

            உமது கரமே என்னோடு இருந்து

            தீங்கு என்னை துக்கப்படுத்தாமல்

            விளக்கி விடும் காத்தருளும்

                        ஜெபம் கேளும்

                        பதில் தாரும்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு