06 September 2023

என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை

என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை

            பாவியானாலும் என்னை ஏற்க மறுக்கவில்லை

            உம்மை நினைத்து வாழவும்

            உம்மில் நிலைத்து வாழவும்

            அருள் புரியுமே அன்பர் இயேசுவே (2)

 

                        போதும் அன்பே நீர் போதும்

                        உமது உறவில் நிறைவு வேண்டும்

                        உம்மில் என்றும் நிலைக்கும் வரம் தாரும் (2)

 

1.         இயேசுவே உம்மை மறக்கும்போது

            பாவம் என்னை நெருக்குதே

            எதிலும் உம்மை நினைக்கும்போது

            சிலுவை அன்பு நிறைக்குதே

            உம்மை மறவா உணர்வின் உள்ளம்

            நாளும் எனக்கு தாருமே

            உறுதியாய் உம் உறவில் வளர

            இறுதி வரையும் உதவுமே (2) - போதும்

 

2.         தீமை அனைத்தும் அகட்டி விடவே

            விரும்பவில்லை நெஞ்சமே

            தினமுமே திரு வார்த்தை கேட்டும்

            மாற்றம் ஏனோ கொஞ்சமே

            தூய ஆவி பெலனை தந்து

            நாளும் என்னை நடத்துமே

            உறுதியாய் உம் உறவில் வளர

            இறுதி வரையும் உதவுமே (2) - போதும்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...